கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

யுத்தத்தால் மன்னாரில் கணவன் மார்களை இழந்த பெண்களுக்கு கரிட்டாஸ் நிருவனம் உதவி-(படங்கள் இணைப்பு)

>> Sunday, 20 September 2009

26-11-2010 -கடந்த யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாழ்ந்து வரும் கணவனை இழந்து குடும்பத்தை தலைமையாகக் கொண்ட குடும்பப்பெண்களுக்கு ‘கரிட்டாஸ் செக்ரிப் பப்லிக்’ அமைப்பின் நிதி அனுசரனையுடன் மன்னார் சகவாழ்வு மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவித்திட்டத்தினை நிதி வழங்குனர்கள் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதாக மன்னார் சகவாழ்வு மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் எப்.எம்.டியுட்டர் தெரிவித்தார்.

மாந்தை மேற்குப்பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் அதிகலவான பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் வருமானத்தினைத் தேடிக்கொள்வதற்காக மன்னார் சகவாழ்வு மன்றம் ‘கரிட்டாஸ்’அமைப்பின் நிதி உதவியுடன் தெரிவுசெய்யப்பட்ட குடும்பப்பெண்களுக்கு வீட்டுத்தோட்டம்,தையல்,நாட்டுக்கோழிக் குஞ்சு வளர்த்தல் போன்ற வாழ்வாதார உதவிகளை வளங்கியது.இவ் உதவித்திட்டத்தின் பயனாளிகளை நேரில் சென்று ‘கரிட்டாஸ் செக்ரிப் பப்லிக்’அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சில்வா கோறோ கோவா,சகவாழ்வமன்ற தலைமை அலுவலக அதிகாரி ஜீவன் அமரசிங்கம் உற்பட சகவாழ்வு மன்ற பனியாளர்களும் கலந்து கொண்டு பார்வையிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.





Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP