உணவுப் பண்டங்களின் விலைகள் மன்னாரில் கிடுகிடு உயர்வு-
>> Sunday, 20 September 2009
நாடு பூராகவும் கோதுமை மாவின் விலை அதிகரித்த நிலையில் மன்னாரில் பாண் உட்பட ஏனைய கோதுமைப் பண்டங்களின் விலைகள் உடனடியாகவே உயர்தப்பட்டுள்ளது.
மன்னாரில் ஏற்கனவே பாண் 55 ரூபாவாக விற்பணை செய்யப்பட்டு வருகின்றது.தற்பொழுது மூன்று ரூபா அதிகரித்து 58 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதே வேளை உணவுப் பண்டங்களின் விலைகளும் 5 ரூபா முதல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மன்னாரில் திறந்து இருக்கும் இரவு உணவு விடுதிகளிண் விலைகள் தாறுமாறாக அதிகரிக்கப்பட்டுள்ளன. சிலவகை உணவுகள் ஒரு கோப்பை 400 ரூபாவாக விற்கப்படுவதனையும் காண முடிகின்றது.
மன்னாரில் உள்ள விலைக்கட்டுப்பாட்டுத் திணைக்களமும், நுகர்வோர் அதிகாரசபையும் இதில் தலையிட்டு தமக்கு அதிகரித்த உணவுப் பன்டங்களின் விலைகளிலிருந்து நிவாரணம் வழங்குமாறு கோருகின்றனர் மன்னார் வாழ் பொது மக்கள்.