மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருஷ அலங்கார உற்சவ விழா-முழுமையான படங்கள் இணைப்பு....
>> Sunday, 24 July 2016

விநாயகர் வழிபாடு கணபதி ஹோமம் அபிஷேகம் விசேட பூஜை நடைபெற்று பக்தர்கள் அலகு குத்தி கற்பூரச்சட்டி எடுக்கவும் பால் குடம் ஏந்தியதோடு அங்கப்பிரதட்சனம் செய்து நிவர்த்தி செய்தனர் அன்னதானம் வழங்கப்பட்டு வந்ததோடு….. பூர்த்தி தினமான ஆடி 8ம் நாள் (23-07-2016) சனிக்கிழமை சதய நட்சத்திர நன்னாளில் பகல் 108 சங்காபிஷேக பூஜையுடன் அன்னதானமும் அத்தோடு மாலை விசேட பூஜை கூட்டுப்பிராத்தனை வசந்த மண்டப பூஜை உள்வீதி வெளி விதி உலா திருவருட்பிரசாதம் வழங்கல் என்பன நிகழ்ந்து இரவு விசேட பூஜை கூட்டுப்பிராத்தினை வசந்த மண்டப பூஜையைத்தொடர்ந்து விநாயகப்பெருமான் திரு ஊஞ்சலாடி பக்தர்களை மகிழ்வித்ததோடு மின்னொளியும் நிலவொளியும் கலக்க வாத்தியங்கள் இசை முழங்க பக்கதர் கோடிகளின் நடுவே உள்வீதி வெளிவீதி உலா வந்து அருங்காட்சியாகவும் சிறப்பாகவும் அமைந்ததோடு விநாயகப்பக்த அடியார்கள் கற்பக விநாயகரின் திருவருளை நிறைவாக பெற்று மகிழ்ந்தனர்.