கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதினால் இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் பாதிப்பு-படம் இணைப்பு

>> Friday, 14 January 2011

மன்னார் பேசாலை கடற்பரப்பில் கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களிலும் அத்து மீறி வருகை தந்த சுமார் நூற்றுக்கணக்கான  இந்திய இலுவைப்படகுகள் பேசாலைப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியுடைய மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பேசலைப் பகுதி மீனவர்களினால் கடலில் போடப்பட்டிருந்த திருக்கை வலை,பட்டி வலை,அழிச்ச வலை எனப்படும் பல இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த மீன்பிடி வலைகளே இந்திய மீனவர்களின் இலுவைப்படகுகளில் அகப்பட்டு  அறுந்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பேசாலை மீனவர்கள் தெரிவித்துள்ளனா.;


பேசாலை மீனவர்களுக்கு இதனால் ஏற்பட்டுள்ள பாதீப்பு தொடர்பாக பேசாலை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பனிப்பாளர் பி.எஸ்.மிரான்டாவுக்கு இவ்விடையம் தொடர்பாக மகஜர் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.


மேற்படி மகஜரில் கடந்த செவ்வாய்,புதன் ஆகிய இரண்டு தினங்களிலும் ராமேஸ்வரம்,மண்டபம்,தங்கச்சிமடம்  ஆகிய பகுதிகளில் இருந்து பேசாலை கடல் பகுதிக்கு அத்துமீறி நுழைந்த 150 இற்கும் அதிகமான இலுவைப்படகுகள் அதிகலவான மீன்களை சட்டவிரோதமாக பிடித்ததுடன் தமது பெறுமதி வாய்ந்த வலைகளையும் நாசப்படுத்தியுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இதே வேளை கடந்த புதன் கிழமை மாலை காட்டாஸ்பத்திரி மற்றும் பேசாலை கடற்பரப்பில் கரையில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் அதிகூடிய பிரகாசத்துடன் கூடிய மின்னொளியில் உதவியுடன் நூற்றுக்கணக்கான இந்திய இலுவைப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை நேரடியாகப்பார்க்கக் கூடியதாக இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



இதே சமயம் நேற்று வியாழக்கிழமை மன்னார் கடற்தொழில் தினைக்களத்தில் உதவிப்பனிப்பாளர் பி.எஸ்.மிரான்டா தலைமையில் கடற்தொழில் சங்கங்களில் கடமையாற்றும் முகாமையாளர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்று இடம்பெற்றது.


மேற்படி கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் கடற்பரப்பிற்குல் எந்த பகுதியில் இந்திய மீன்பிடி படகுகள் தென்பட்டாலும் அது குறித்து தனக்கு உடன் அறியத்தருமாறு உதவிப்பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இவ்விதம் தனக்கு கிடைக்கும் தகவலை தான் உடன் கொழும்பில் உள்ள கடற்தொழில் திணைக்கள தலைமை அலுவலகத்திற்கு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


அத்துடன் கடந்த செவ்வாய்,புதன் ஆகிய தினங்களில் கடலில் விரிக்கப்பட்டிருந்த பேசாலை மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களின் இலுவைப்படகுகளில் சிக்கி சேதமாக்கப்பட்ட விடையம் தொடர்பாக கொழும்பு கடற்தொழில் திணைக்கள பனிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

               (மன்னார் நிருபர்;)

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP