மன்னாரில் திருடர்கள் அதிகரிப்பு
>> Thursday, 23 December 2010
மன்னாரில் நத்தார் புதுவருட பண்டிகைக்காலங்களை முன்னிட்டு அதிகடுயவான வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பண் டிகைக்கால பொருட்களை கொள்வனவு செய்யவரும் மக்களிடம் கடுயவாடுவதற்காக அதிகலவான திருடர்கள் மன்னார் நகரப்பகுதியில் நடமாடித்திரிவதாகவும் அவர்களிடமிருந்து உங்களையும் உங்கள் உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ளுவதுடன்
விழிப்புடன் செயற்படுமாறும் மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸார் மக்களுக்கு அறிவுறுததல்களை வழங்கி வருகின்றனர்.
பண்டிகைக்காலங்களை முன்னிட்டு மன்னார் நகர பகுதியில் உள்ள வீதியோரங்களில் பல நூற்றுக்கணக்காண வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரத்தினை
மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக்காணப்படுகின்றது.இச்சந்தர்ப்பத்தினை பயண்படுத்தும் வகையில் அதிகடுயவான திருடர்கள் மக்களுடன் மக்களாக நடமாடி கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நகைஇபணம்இநிறுத்திவைக்கப்பட்டுள்ள துவிச்சக்கர வண்டிகளும் கலவாடப்பட்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பகல் இரவு நேரங்களில் அதிகலவான மக்கள் பொருட்களை கொள்வனவுசெய்ய வரும் நிலையில் மன்னார் நகரப்பகுதியிலோ அல்லது பஸார் பகுதியிலோ திருடர்களை அல்லது சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் காணப்படும் பட்சத்தில் விளிப்புடன் இருக்குமாறும் அருகில் உள்ள மன்னார் பொலிஸ் நிலையத்தில் அல்லது 023-2222227,023-2223224,023-2222222 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறும் மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
மன்னார் நிருபர்-SRL