மன்னார் தனியார் பஸ்சிற்கும் அரச பஸ்சிற்கும் இடையில் தொடர் மோதல்-பயணிகள் நடுத்தெருவில்.
>> Sunday, 26 December 2010
தெரிவித்துள்ள நிலையில் இவ்விடையம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்க கொண்டுவந்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த 04 பயணிகள் கொழும்பு,அனுராதபுரம்,கெக்கராவ ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டு தனியார் பேருந்து மூலம் நேற்று(25-12) இரவு 10.00 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்தனர்.
பின் இவர்கள் பேசாலை மற்றும் தலைமன்னார் ஆகிய கிராமங்களுக்குச் செல்வதற்கு பஸ்சிற்காக காத்திருந்தனர்.இதன் போது கொழும்பில் இருந்து நேற்று(2-512)இரவு 8.30மணிக்கு புறப்பட்ட மன்னார் அரச போக்குவரத்துச்சேவைக்குச் சொந்தமான(NA-3628)எனும் இலக்கம் கொண்ட பஸ் ஒன்று இன்று(26-12)அதிகாலை 3.30மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை வந்தடைந்தது.
பின் குறித்த பேருந்தானது தலைமன்னார் வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு வருவது வழமை.இந்த நிலையில் குறித்த 04 பயணிகளும் பஸ்சில் ஏற பஸ் நடத்துனர் பயணிகளிடம் எந்த பஸ்ஸில் வந்தீர்கள்? ஏன்று கேட்க தனியார் பஸ்சில் வந்தோம் என்று கூறியுள்ளனர்.உடன் நடத்துனர் கூறியுள்ளார் தனியார் பஸ்சில் வந்தவர்களை நாங்கள் ஏற்ற முடியாது.எற்ற வேண்டாம் என்று அரச போக்கு வரத்துச் சேவையின் மன்னார் சாலை முகாமையாளர் கண்டிப்பான உத்தரவைப் பிரப்பித்துள்ளார் என்று கூறி உடனடியாக பஸ்சில் இருந்து இறங்குமாற நடத்துனர் குறித்த 04 பேரிடமும் தெரிவித்துள்ளார்.மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த 04 பயணிகள் கொழும்பு,அனுராதபுரம்,கெக்கராவ ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டு தனியார் பேருந்து மூலம் நேற்று(25-12) இரவு 10.00 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்தனர்.
பின் இவர்கள் பேசாலை மற்றும் தலைமன்னார் ஆகிய கிராமங்களுக்குச் செல்வதற்கு பஸ்சிற்காக காத்திருந்தனர்.இதன் போது கொழும்பில் இருந்து நேற்று(2-512)இரவு 8.30மணிக்கு புறப்பட்ட மன்னார் அரச போக்குவரத்துச்சேவைக்குச் சொந்தமான(NA-3628)எனும் இலக்கம் கொண்ட பஸ் ஒன்று இன்று(26-12)அதிகாலை 3.30மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை வந்தடைந்தது.
இறங்க மறுத்த சமையம் டிக்கட் புத்தகத்தினால் தாக்கி 04 பயணிகளையும் பலவந்தமாக இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் 4 பேரும் பஸ் தரிப்பிடத்தில் நின்று விட்டு விடிய காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு தமது இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
மன்னார் தனியார் பேருந்திற்கும்-அரச பேருந்திற்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் மோதல்களினால் தற்போது பயணிகள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இவ்விடையம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
மன்னார் நிருபர்-SRL