ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் வடமாகண அலுவலகம் மன்னாரில் திறந்து வைப்பு
>> Wednesday, 20 January 2010
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்சபையின் வடமாகாண செயலகம் ஒன்று மன்னாரில் நேற்று கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட அலுவலகத்தினை அமைச்சர் றிஸாட் பதியுதீன்இபாராளுமன்ற உருப்பினர் உனைஸ் பாருக் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
மன்னார் மாவட்ட மக்கள் அமைச்சினால் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக கொழும்பிற்கு வருவதாகவும் எமது மக்கள் தொடர்ந்தும் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு மன்னாரில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் றிஸாட் பதியுதின் தெரிவித்தார்.ஜனவரி முதல் மேற்படி அலுவலகத்தில் மாதத்தில் முதல் வார திங்கட்கிழமை அலுவலகத்தில் தன்னை வந்து சந்திக்க முடியும் என்றும் இனி கொழும்பிற்கு வரத்தேவை இல்லை என தெரிவித்தார்.
இதணைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நீர் இரைக்கும் இயந்திரமும் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுகளில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலாஸ் பிள்ளைஇமன்னார் பிரதேசச்செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேல்இமன்னார் வலையக்கல்விப்பனிப்பாளர் எம்.ஏ.றெவ்வல் உற்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.