மன்னாரில் சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்ற 36 பேர் கைது
>> Wednesday, 20 January 2010
மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்ற 36 பேரை மன்னார் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்த இலங்கை மின்சார சபை அதிகாரிகள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கே.ஜீவரானி ஒவ்வெருவருக்கும் தலா 16ஆயிரம்ரூபாய் முதல் 18ஆயிரம் ரூபாய் வரையிலான அபராதத் தொகையினை செலுத்தமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மன்னார் மாவட்டத்தில் சட்டவிறோத மின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தினம் தினம்; அதிகரித்துச் செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிணைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபை அதிகாரிகள் பொலிஸாரின் உதவியுடன் பேசாலை முருகன் கோவில்,காட்டாஸ்பத்திரி,மற்றம் நாணட்டான் ஆகிய கிராமங்களுக்குச் சென்று நேற்று மாலை திடிர் சோதனைகளை மேற்கொண்டனர்.இதன்போது மேற்படி கிராமங்களில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினைப்பெற்ற 36 பேர் கைது செய்யப்பட்டு இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி மேற்படி அபராதத் தொகையினை செலுத்துமாறு உத்தரவிட்டார்.
மன்னார் நிருபர்