மன்னார் பாடசாலை சிற்றுழியர்களுக்காண நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வானது அநிதியான முறையில் இடம்பெற்றுள்ளதாக அ.செல்வம் அடைக்களநாதன் குற்றம் சுமத்தியிள்ளார்
>> Wednesday, 20 January 2010
(18-11-2010) -மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவிவரும் பாடசாலை சிற்றுழியர்களுக்காண பதவி வெற்றிடத்தினை நிரப்புவதற்காக இன்று (18-11-2010) மன்னார் வலையக் கல்விப்பணிமனையில் நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வானது அநிதியான முறையில் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் அ.செல்வம் அடைக்களநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவி வரும் சிற்றுழியர்களுக்காண பதவி வெற்றிடத்தினை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.இதன்போது பலர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று வியாழன் நேர்முகத்தேர்வு நடத்துவதாக கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தது.எனினும் பலருக்கு நேர்முகத்தேர்வுக்காண கடிதங்கள் கிடைக்கவில்லை என தன்னிடம் தெரிவிக்கப்பட்டடு.
இதேவேளை நேர்முகத்தேர்வின் போது நேர்முகத்தேர்விற்கு சமூகமளித்தவர்களை விட அவர்கள் தயாரித்து வைத்திருந்த பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் ரீதியாக பதவி வெற்றிடத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்காண நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த நியமனங்களை உடன் நிருத்தி அதனை பரிசீலினை செய்யுமாறு கோரி வட மாகன ஆளுனர் ஐP.எ.சந்திரசிரி மற்றும் பல அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் செல்வம் அடைக்களநாதன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்