கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னார் அபிவிருத்தி,மீள்குடியேற்றம்; கச்சேரியில் கலந்துரையாடல் ஆரம்பம்

>> Friday, 4 December 2009

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ மற்றும் கைத்தொழில் வர்த்தக்கத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் ஆகியோர் தலைமையில்
இன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் , நூர்தீன் மசூர், உசேன்பாறூக், மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கலஸ்பிள்ளை, இராணுவ கடற்படை உயரதிகாரிகள் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது மன்னார், வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் குறைகள் உள்ளிட்ட விடயங்கள் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. ___ gg

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP