மன்னாரில் டெங்கு தீவிரம் 10 நாட்களுக்குள் ஐவர் பலி!
>> Saturday, 12 December 2009
மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலால் ஐவர் உயிர் இழந்துள்ளார்கள். இன்று திங்கட்கிழமை பெரிய கமம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்து உள்ளனர்.
இவருடைய தாயார் கடந்த வாரம் இதே காய்ச்சலினால் உயிர் இழந்திருக்கின்றார். மன்னாரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
காய்ச்சல் ஏற்பட்டு நீடிக்குமானால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என்று சுகாதார பிரிவினர் கோருகின்றனர் இதே நேரம் டெங்கு நோயை கட்டுபடுத்துகின்றமை குறித்து ஆராயும் அவசரக் கூட்டம் ஒன்று இன்று காலை 10 .30 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் ஏ.நிக்கொலாஸ் தலைமையில் மன்னார் அரச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டீமேல், மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் யூட் ரதனி, சுகாதரா சேவை அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ்-இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.