தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல்சேவை: கொழும்பில் பேச்சு நடத்தும் இந்திய உயரதிகாரி
>> Sunday, 20 September 2009
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் மீளவும் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது.
இதுதொடர்பாக சிறிலங்கா துறைமுகங்கள் அமைச்சின் வர்த்தகக் கப்பல் பிரிவின் பணிப்பாளர் சாந்த வீரக்கோன் தகவல் வெளியிடுகையில்,
“ போரினால் இடைநிறுத்தப்பட்ட இந்த கப்பல் சேவையை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுக்கள் தற்போது நடந்து வருகின்றன.
இதற்காக இந்தியாவின் துறைமுக அமைச்சின் செயலாளர் மோகன்தாஸ் தற்போது கொழும்பு வந்துள்ளார்.
இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும்“ என்று தெரிவித்தார்.
சுமார் 20 கி.மீ நீளமுள்ள பாக்கு நீரிணையால் பிரிக்கபட்டுள்ள இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு பயணிகள் தற்போது முற்றுமுழுதாக விமான சேவைகளைத் தான் நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.