கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னாரில் அருட் தந்தையரைத் தாக்கிய பொலீசாருக்கெதிரான ஆர்ப்பாட்டம்

>> Thursday, 10 September 2009

18/09/2009

அருட்தந்தையர் ஒருவரைத் தாக்கிய சம்பவத்தையடுத்துப் பொலிஸாருக்கு எதிராக பேசாலை மக்கள் இன்று நடத்திய மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்றுகாலை 10.30மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் மன்னார் பிரதேசசெயலரும் கலந்துகொண்டிருந்தார். மன்னார், பேசாலை, இலங்கை பெந்தகோஸ் சபை நேற்றிரவு நடத்திய வருடாந்த ஹன்வெசன் நிகழ்வு மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி பேசாலையிலுள்ள பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க மக்கள் ஒன்றுதிரண்டு கத்தோலிக்கக் குருக்களுடன் யூட்சன்வீதியில் உள்ள இலங்கை பெந்தகோஸ் சபைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு பெந்தகோஸ் சபையினரால் வருடாந்த ஹன்வெசன் நிகழ்வு நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு பாதுகாப்புக்காகப் பொலிஸாரும் குவிக்கப்படிருந்தனர். இந்நிலையில் அங்கு சென்ற பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க மக்களும் அருட்தந்தையர்களும் இணைந்து பெந்தகோஸ்த சபையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
நீண்டநேரம் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, பெந்தகோஸ்த சபையினர் அந்நிகழ்வை நிறுத்துவதாகத் தெரிவித்தனர். அதன்பின்னர், அப்பகுதி கத்தோலிக்க மக்கள் கலைந்து சென்றுள்ளனர். எனினும் ஒரு சிலர் அவ்விடத்தில் நின்று மீண்டும் கோஷம் எழுப்பியுள்ளர்.
அப்போது மீண்டும் அவர்களிம் வந்த அருட்தந்தை ஒகஸ்டின் அடிகள், கோஷமிட்டவர்களை அங்கிருந்து சென்று விடுமாறு கோரிக்கை விடுத்தார். பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனைத் புரிந்து கொண்டு, அருட்தந்தை வன்முறையைத் தூண்டுகிறார் என நினைத்து அவரைத் தாக்கியுள்ளார்.
இதனால் அப்பகுதி கத்தோலிக்கருக்கும் பொலிஸாருக்கும் இடையே, நேற்று இரவு 8.30 மணியளவில் முருகல்நிலை தோன்றியது. இந்நிலையில் இன்று அருட் தந்தையரைத் தாக்கிய பொலிஸாருக்கு எதிராக பேசாலை மக்கள் மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP