கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னார் கள்ளியடி கற்பக விநாயகர் ஆலய ஜய வருஷ அலங்கார உற்சவ விழா விஞ்ஞாபனம்-2014

>> Saturday 2 August 2014

இந்து சமுத்திரத்தின் முத்தாய் திகழும் இலங்கை திருநாட்டின் கடலும் வயலும் சூழ்ந்து நல் வளங்கள் நிறைந்ததும்,இறைபக்தியும்,இன் தமிழ்  பற்றாளர்களும் செறிந்து வாழும் மன்னார் கள்ளியடி பகுதியில் வீற்றிருந்து அகிலமெங்கும் வாழுகின்ற தம் அடியவர் குறை களைந்து வேண்டும் வரம் தந்தருளும் கற்பக பிள்ளையார்,இலக்குமி தாயார்,பால முருகன்,நவநாயகர்,சண்டேஸ்வரர்,முதலான பரிவார தெய்வங்களுக்கு நிகழும் மங்கள கரமான ஜய வருடம் ஆடி 18ம் நாள் 3.8.2014 காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி தினமும் பகல் அபிசேகமும் மாலை உள் வீதி,வெளி வீதி திருவிழாவும் இடம் பெற்று ஆடி 27ம் நாள் 12.8.2014 செவ்வாய்கிழமை சதய நட்சத்திர நன்னாளில் பகல் 108 சங்காபிசேகமும்  இரவு உள்வீதி வெளிவீதி உற்சவமும் நடை பெற திருவருள் கூடி உள்ளது.


அடியவர்கள் அனைவரும் கிரியாகாலங்களில் கலந்து இறை பணிகளை ஆற்ற வழிபட்டு நல்லருள் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடை பெறும்.

கிரியாகால குருக்கள் 

பிரதிஷ்டா பிரதம குரு 

சிவஸ்ரீ தியாக கருணானந்த குருக்கள்
 (பிரதம குரு.திருக்கேதீச்சரம்)

ஆலய நித்திய பூசகர் 

திசா சர்மா 
குகன் சர்மா 

மங்கள வாத்தியம் 


திரு.பா.பாலசுந்தர் குழுவினர் 
(திருக்கேதீச்சரம்)

பூமாலை அலங்காரம் 

திரு.எஸ்.சிவசந்திரன்
(திருக்கேதீச்சரம்)

ஒலி  ஒளி அமைப்பு 
 திரு.கோபாலகிருஷ்ணன் கிருபா 
(கோவில்குளம்)


        விழாக்காலத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்.

குறிப்பு - பூசைக்கு தேவையான பூக்கள்,பால்,நெய்,தேன்,இளநீர்,பழவகை போன்றவற்றை கொடுத்து நல்லருள் பெறுமாறு வேண்டுகின்றோம்.



இங்கனம் 
இறை பணியில் நிற்கும் 
உபயக்காரர்கள்,கிராம மக்கள், 
பரிபால சபையினர்,
கள்ளியடி,
மன்னார்.




Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP