கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மகா சிவராத்திரியின் சிறப்பு

>> Wednesday 26 February 2014

இந்த உலகத்தைப் படைத்தவர் பிரம்மா. காப்பவர் திருமால் என்பதை அனைவரும் அறிவோம். திடீரென்று இவர்களுக்குள் ஒரு தகராறு ஏற்பட ஆரம்பித்தது. படைத்தவர்  பெரியவரா, காப்பவர் பெரியவரா எள்பதுதாள் இந்நத் தகராறு. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமல்லவா? உடன் தானே தேவர்கள் அனைவரும் கூடினார்கள். இவர்களில் யாரைப் பெரியவர் என்று எவ்விதம் முடிவு செய்வது என்று எ ண்ண ஆரம்பித்தார்கள்; கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். பிரம்மா திருமால் இவர்களில் ஈசனின் அடிகளையும் முடிகளையும் முதலில் கண்டு வருகிறவரே சிறந்தவர் , முதன்மையானவர் என்ற முடிவிற்கு வந்தார்கன். உடனே இருவரும் விரைந்தார்கள்.


திருமால் பன்றி உருவம் கொண்டு பாதாளம் செல்ல ஆரம்பித்தார். பிரம்மா வானத்தில் பறக்க ஆரம்பித்தார். இருவரும் கடின உழைப்பை மேற்கொண்டார்கள். வான மண்டலத்தைச் சுற்றி வந்தவராலும் முடியைக் காண முடியவில்லை. பன்றி உருவம் கொண்டு பாதாளத்திற்குச் சென்றாலும் எதையுமே செய்ய முடியவில்லை; இருவருமே  சோர்வு கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இவர்களின் கவலையைப் போக்குவதற்காக அன்னை பார்வதி தேவி ஜோதி வடிவத்தில் காட்டினார். இவர்கள் இருவருக்கும் அருள் புரிந்த காலம் மாசி மாதம், தேய்பிறையில் சதுர்திதியின் போதுதான்; நேரமோ நடு இரவாகும். இதுதான் சிவராத்திரியாகப் போற்றப்படுகிறது. 

சும்மா இருக்காமல் விளையாட்டாக ஈசனின் கண்களைப் பொத்த இந்த உலகத்தை இருள் தழுவிக் கொண்டது. எனவே, அனைவரும் செயலிழந்தனர். இவ்விதம் தாம் செய்த குற்றத்திற்குத் தண்டனை பெறுவதற்காக அன்னையார் நான்கு ஜாமங்களிலும் ஈசனைப் பூஜித்து வழிபட்டாள். அம்மையாருக்கு என்ன வரம் வேண்டும் என்று ஐயன் கேட்கவும், ' இந்த இரவு தங்கள் பெயராலேயே ' சிவராத்திரி ' என்று போற்றப்பட வேண்டும். விதிப்படி தங்களைப்போற்றி வணங்குபவர்களுக்குத் தாங்கள் அருள் பாலிக்க வேண்டும் என்றாள்; ஐயனும் அதற்கு இசைந்தார். இரவு 12 மணிக்கு மேல் ஒரு மணிக்கு இடைப்பட்ட காலத்தில்தான் பெருமான் இலிங்கமாக உருக்கொண்ட காலமாகும். 

இந்த வேளையில் இநைவனைப் பூஜித்து வருபவர்கள் அனைவரும் பெரும் பேறுகள் அடைவார்கள். தேவர்கள் அனைவரும் மாதந்தோறும் வருகின்ற சிவராத்திரியை கொண்டாடுவார்கள். மாசி மாதத்தில் பிரம்மாவும், பங்குனி மாதத்தில் விஷ்ணுவும், சித்திரை மாதத்தில் உமா தேவியும், வைகாசி மாதத்தில் சூரிய பகவானும், ஆனி மாதம் உருத்திரனும், ஆடி மாதம் முருகப் பெருமானும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் நாகராஜனும், ஐப்பசியில் இந்திராதி தேவர்களும், கார்த்திகை மாதத்தில் சரஸ்வதியும், மார்கழியில் இலட் சுமியும், தை மாதத்தில் ஈஸ்வரனும், கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.

மகா சிவராத்திரியன்று இரவெல்லாம் கண் விழித்து அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும். ஈசனின் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்க வேண்டும். நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று 5 வகைப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியன்று இரவு சிவராத்திரி வரும். மாசி மாதம் வரக்கூடிய சிவராத்திரி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அன்று இறைவன் சுயம்புவாக  , ஜோதி வடிவமாக , அடியும் முடியும் இல்லாத பரம்பொருளாக நமக்கு அருள் செய்வார். சிவராத்திரி சிறப்புறக் கொண்டாடப்படும் இடங்கள் 12 என்று கூறப்படுகிறது. 

சோமநாதம், ஸ்ரீ சைலம், உஜ்ஜையினி, ஓம் காரம், வைத்ய நாதம், பீம சங்காரம், இராமேசுவரம்,  நாகேசம், காசி, திரியம்பலம், வேதாரம், குக மேசம், ஆகியவைதான் 12 சிறப்பான இடங்கள். ஆனால் இவை தவிர சிவஸ்தலங்கள் அனைத்திலும் மகா சிவராத்திரிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட 12 இடங்களும் ஜோதி லிங்கஸ்தலங்களாகும். எனவேதான் சிறப்பைப் பெற்றன எனலாம். மற்ற நாட்களில் சிவபெருமானைச் சிவஸ்தலங்களுக்கு சென்று வழிபடாவிட்டாலும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் மேற்கொண்டு வணங்கி வருபவர்களுக்கு எல்லாம்  வல்ல இறைவன் அருள் தந்து காப்பான் என்பது உறுதி.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP