கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

கள்ளியடியில் கட்டுப்பாட்டை இழந்த கண்டர் வாகனம். மயிரிழையில் உயிர் தப்பிய தபால் ஊழியர் (படங்கள் காணொளி இணைப்பு)

>> Monday 15 July 2013

கடந்தவாரம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கள்ளியடி பிரதேச A32 பிரதான வீதியில் ஏற்ப்பட்ட விபத்தில் தபால் ஊழியர் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளார்.


 இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

 திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்ததினால் தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அப் பாதைவழியே சைக்கிளை உருட்டிக்கொண்டு பாதையை கடக்க முற்பட்ட தபால் ஊழியரான அண்டனி சுரேஷ் என்பவர் மீது மோத முற்பட்ட வேளை தபால் ஊழியர் தனது சைக்கிளை விட்டுவிட்டு எதிர் பக்கத்திற்கு பாய்ந்துள்ளார் வாகனம் சைக்கிளில் மோதியதுடன் மட்டுமன்றி கட்டுப்பாட்டை இழந்து கள்ளியடி பாடசாலை வேலியையும் சேதப்படுத்தி உள்ளது.

 இவ் வேளை அவ்விடத்திற்கு விரைந்த இலுப்பைக்கடவை வீதி போக்குவரத்து போலீசார் கனரக வாகன சாரதி அதி வேகத்தில் வந்ததினால் தான் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவித்து கூறி இவ் விபத்திற்கு சாரதியே காரணம் எனதெரிவித்து தபால் ஊழியருக்கு இழப்பீடாக சைக்கிள் ஒன்று வாங்கி கொடுக்கும்படி தெரிவிக்க தபால் ஊழியருக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கப்பட்டது.

 கள்ளியடி பாடசாலைக்கு முன்பாக இவ் விபத்து இடம் பெற்றது பாடசாலை மாணவர்களின் பெற்றார் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது காரணம் பாடசாலை மாணவர்கள் இப் பிரதான வீதியையே பயன் படுத்துகின்றனர் மேலும் இப் பிரதான வீதி சீரமைக்கப்பட்டது முதல் அதிக வாகனங்கள் இவ்வாறு அதி வேகத்துடன் செல்வதாகவும், இப்பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் வேகக்கட்டுப்பாட்டுடன் செல்ல வேகக்கட்டுப்பாட்டு பதாதை அமைக்க வேண்டும் என வீதி போக்குவரத்து போலீசாரிடம் கேட்டுக்கொண்டதுடன் உரிய அதிகாரிகள் இது தொடர்பாக கவனம் எடுக்க வேண்டும் என்றும் கள்ளியடி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



 

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP