'மன்னாரில் சைவ சமய வரலாறும் அதன் வளர்ச்சியும்' (ஒரு சுருக்கநோக்கு)
>> Sunday, 31 March 2013
1.0 அறிமுகம்
'மன்னாரில் சைவசமய வரலாறும் அதன் வளர்ச்சி நிலையும' என்ற ஓர் ஆய்வுச்சுருக்க நோக்கினை கலாநிதி சபா.மனோகரக் குருக்களின் முதலாவது குருபூசைத்தினமாகிய 31.03.2013 (ஞாயிறு) இன்று குருவின் பாதக்கமலங்களுக்கு சமர்ப்பித்து உங்கள் முன்னிலையில் பேருரையாற்ற எல்லாம் வல்ல குருகணபதியை உள்ளத்தே இருத்தி உரையாற்ற விளைகின்றேன்.