கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

கள்ளியடியில் வயோதிப குடும்பத்தினர் மீது தாக்குதல்-10 பவுண் தங்க நகைகள் கொள்ளை.

>> Tuesday, 1 January 2013

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கள்ளியடி கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை(31-12-2012) இரவு உள் நுழைந்த மர்ம நபர்கள் குறித்த வீட்டில் இருந்த வயோதிப தம்பதியினரை கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் சுமார் 10 பவுண் தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளதாக இலுப்பக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



 இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,,,,

 மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பக்கடவை கள்ளியடி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில்  வயோதிப தம்பதியினர் தனிமையாக வாழ்ந்து வந்தனர். இதன் போது நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் குறித்த வீட்டிற்கு சுமார் 4 பேர் கொண்ட மர்ம நபர் குழு ஒன்று உட் புகுந்து குறித்த வயோதிப கணவன்,மனைவி ஆகிய இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கி ,பாரிய கத்திகளினால் வெட்டிய நிலையில் அவர்கள் இருவரும் அணிந்திருந்த சுமார் 10 பவுண் நகைகளை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

 இதன் போது கள்ளியடி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.சுப்பிரமணியம்(வயது-63) மற்றும் அவரது மனைவி சுப்பிர மணியம் ராஜேஸ்வரி(வயது-56) ஆகிய இருவரும் கடும் காயமடைந்திருந்தனர். இவர்கள் எழுப்பிய அபாயக்குரல் கூட அயல் வீட்டாருக்கு கேட்காத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் தகவல் அறிந்த இலுப்பக்கடவை பொலிஸார் குறித்த வீட்டிற்கு சுமார் 12 மணியளவில் சென்று குறித்த இருவரையும் மீட்டனர். பின் மேலதிகச் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை(01-01-2012) காலை 9 மணியளவில் மாந்தை நாயாத்து வழி வீதியூடாக படகின் மூலம் கொண்டு வரப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குறித்த இருவரும் மன்னார் வைத்தியசாலையில்  சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP