மாந்தை மேற்கில் உள்ள சன்னார் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை!
>> Sunday, 10 October 2010
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பிரிவுக்கு உட்பட்ட சன்னார் மீள்குடியேற்றக் கிராமத்தில் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமலேயே வாழ்கின்றார்கள்.
அடர்ந்த காடுகளுக்குள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும் விலங்குகளால் தாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
மலசல கூட வசதிகள் இல்லை என்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது என்றும் கூறி உள்ளார்கள்.