மன்னாரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளை மேற்கொள்ள பரிசீலினை…மன்னார் ஆயரில்லம் தகவல்
>> Sunday, 3 October 2010
மன்னார் மாவட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதற்கமைவாக மன்னார் மறைமாவட்ட ஆயரினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் பரசீலினைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 29ம் திகதியிடப்பட்டு மன்னார் ஆயர் அவர்களினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயலாளருக்கு மன்னார் மாவட்டத்திலும் ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என கோரி கடிதம் எமுதியிருந்தார்.அக்கடிதத்தில் மன்னார் மாவட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நல்ல பதிலைக்காட்டுமாறும் கடிதத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நாட்டின் சகல பகுதிகளிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் அதன் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.இந்த நிலையிலே மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை நல்லிணக்க ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பலனாக அதற்கு ஆணைக்குழு பதில் அளித்திருக்கின்றது.
மன்னார் மாவட்டத்திலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஆயரின் கோரிக்கைக்கமைவாக சாதகமாக பரிசீலிக்கப்படும் என ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடபடபட்டுள்ளதாக மன்னார் ஆயரில்லம் தெரிவித்துள்ளது.
மன்னார் நிருபர்