மன்னாரில் சட்டவிரோதமாக காணி பிடிப்பு - பிரதேசச் செயலாளர் மறுப்பு
>> Sunday, 1 August 2010
மன்னார் மாந்தை எள்ளுப்பிட்டி கிராமத்தில் கடந்த 20 வருடங்களின் பின் அண்மையில் மக்கள் மீளவும் மீள் குடியேற்றப்பட்ட நிலையில் முசலி பிரதேசச்செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றும் அதிகாரி ஒருவரினால் சட்டவிரோதமான நிலையில் காணி பிடிக்கப்பட்டு அவருடைய உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவழில் எதுவித உண்மையும் இல்லை என மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் கையெழுத்திட்ட மகஐர் ஒன்றினை மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேலிடம் கொடுத்துள்ளனர்.
இவ் விடையம் தொடர்பாக மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேல் இடம் தொடர்பு கொண்டு கேட்ட போது கிராம மக்கள் கையேழுத்திட்ட மகஐர் கிடைத்துள்ளதாவும் குறித்த அதிகாரி தொடர்பாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்