மன்னார் மூர்வீதியில் துனிகர கொள்ளை
>> Friday, 2 April 2010
மன்னார் பிரதேசச் செயலகத்தில் கடமையாற்றும் அலுவலர் ஒரவரின் வீட்டில் இன்று காலை(13-12-2010)துனிகர கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று திங்கள் கிழமை காலை உற்புகுந்த திருடர்கள் 200 பவுன் தங்க நகை மற்றும் 3 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பட்டப்பகலில் திருடியுள்ள சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (13-12-2010)காலை 8.00 மணியளவில் வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில் வீட்டின் ஓட்டைக்கலட்டிக்கொண்டு உற்புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 200 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கலவாடிச்சென்றுள்ளனர்.
சுமார் 9.00மணியளவில் வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குச்சென்ற போது அலுமாரி உடைக்கப்பட்டு பொருட்கள் கலவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனார்.
மேற்படி கொள்ளை தொடர்பாக புலன் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பட்டப்பகலில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-