மன்னாரில் அடையாளம் காணப்படாத சடலம் அரச செலவில் இன்று அடக்கம்
>> Thursday, 4 March 2010
20-11-2010 / மன்னார் புனித செபஸ்ரியார் தேவாலய வளாகத்தினுள் கடந்த 06ம் திகத(06-11)ப் நஞ்சருந்திய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட சுமார் 60 வது வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் குறித்த வயோதிபரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்குற்படுத்திய பின் இன்று(20-11) சனிக்கிழமை அரச செலவில் மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யுமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கே.ஜீவரானி நேற்று மன்னார் பொலிஸாருக்கு உத்த்தரவு பிரப்பித்துள்ளார்
கடந்த 06ம் திகதி சனிக்கிழமை மன்னார் செபஸ்ரியார் ஆலைய வளாகத்தினுள் சுமார் 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.இந்த நிலையில் போராடிக்கொண்டிருந்த இவரைக் கண்டவர்கள் இவரைக்காப்பாற்ற சென்ற போது அருகில் நஞ்சுப் போத்தல் காணப்பட்டுள்ளது.உடன் குறித்த வயோதிபர் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பின் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கே.ஜீவரானி மன்னார் வைத்தியசாலைக்குச் சென்று பிரேத அரையில் வைக்கப்பட்டிருந்த வயோதிப சடலத்தை பார்வையிட்ட பின் சடலம் அடையாலம் காண்பதற்காக மன்னார் வைத்திய சாலையின் பிரேத அரையில் நேற்று(19௧1) வெள்ளிக்கிழமை வரை வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.எனினும் சடலம் அடையாளம் காணப்படவில்லை.இந்த நிலையிலே சடலப்பரிசோதனையின் பின் இன்று(20௧1) அரச செலவில் அடக்கம் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இதற்கமைவாக இன்று மதியம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது.
மன்னார் நிருபர்