மன்னாரில் அரச காணி அபகரிப்பு-மன்னார் நிருபர்(படம் இணைப்பு)
>> Saturday, 6 March 2010
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட கன்னாட்டி கிராம அலவலகர் பிரிவுக்குற்பட்ட சாலம்பன் கிராமத்திற்கு அருகாமையில் நாயாற்று வெளியில் உள்ள அரச காணிகளை அதிகாரிகள் எவருடைய அனுமதியும் இன்றி அமைச்சர் ஒருவரின் அனுமதியுடன் ஒரு இனத்திற்கு சார்பாக தன்னிச்சையாக காணி அபகரிப்பு இடம்பெற்று வருவதாக சமுக ஆர்வளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இக் காணிப்பகிர்வானது காணி இல்லாதவர்களுக்கு காணிக்கச்சேரி நடத்தி சட்டத்தின் படி காணி வழங்குவதை விடுத்து இவ்விதமான ஒரு நிலை சார்ந்து செயற்பாட்டால் சமூக இன முறன்பாட்டை தோற்றுவிக்கும் செயலாக இச் செயற்பாடு காணப்படுவதாக சமுக ஆர்வளர்களும்,சமுக அமைப்புக்களும்,அயல் கிராம மக்களும் ஆழ்ந்த கவலை தெரிவிக்கின்றனர்.எனவே இச்செயற்பாடு உடனடியாக நிருத்தப்பட்டு சட்டப்படி காணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.-
மன்னார் நிருபர்-