மன்னார் மாவட்டத்தில் மழை காரணமாக இதுவரை 22,656 பேர் பாதிப்பு
>> Thursday, 25 March 2010
மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையின் காரணமாக மாவட்டத்தைச் சேர்ந்த பலஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நீக்கொலாஸ் பிள்ளை உரிய அமைப்புக்களிடம்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் பிரதேசச்செயலாளர் பிரிவில் 2183 குடும்பங்களைச்சேர்ந்த 9488பேரும்,நாணாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவில் 861 குடும்பங்களைச்சேர்ந்த 2804 பேரும்,முசலி பிரதேசச்செயலாளர் பிரிவில் 1663 பேரும்,மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 2015 குடும்பங்களைச்சேர்ந்த 7862 பேரும்,மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 4283 குடும்பங்களைச் சேர்ந்த 22,656 பேர் பாபதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மழை தொடர்ந்தும் பெய்து வருகின்றமையினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மழை தொடர்ந்தும் பெய்து வருகின்றமையினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.