கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

வங்காலையில் புதிய வரலாறு படைத்த "மரிசித்தாள்" நாடகம்-(பட இணைப்பு)

>> Wednesday, 6 January 2010

மரிசித்தாள் என்னும் ஈரிரவு நாடகம் திட்டமிட்டவாறு ஒக்டோபர் 15,16ஆம் திகதிகளில் வங்காலைப் பங்கு மக்களால் புனித ஆனால் ஆலய முன்றலில் மேடையேற்றப்பட்டு பலரினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. "வெள்ளைப்புலவர்" என அழைக்கப்படும் புலவரால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாடகம், வங்காலைப் பங்கு மக்களால் புனிதமான ஒரு கலைப்பெட்டகமாக பேணி பாதுகாக்கப்பட்டு வருவதுடன், தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறையேனும் மேடையேற்றப்பட்டு வந்துள்ளது. ஆலய திருவிழாக்களை இக்கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவது போல, இந்த நாடகத்தையும் பெருவிழாவாகக் கொண்டாடுவது மரபு. எனினும் நாட்டில் நிலவிய அசாதாரன சூழ்நிலைகளினால் (யுத்தம்,இடப்பெயர்வு) இந்நாடகம் கடந்த 30 வருடங்களாக மேடையேற்றப்படவில்லை.





யுத்தம் முடிவுற்ற நிலையில் இதனை மேடையேற்றியே தீருவது என்ற மனவுறுதியுடன் இதற்கு தளம் அமைத்துக் கொடுத்தவர் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்குத் தந்தை அருட்திரு.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன தொழிநுட்பம் புகுந்து விளையாடும் கொலிவூட் ஆங்கிலத் திரைப் படங்களும், பாலியல், வன்செயல்களைத் தூண்டுகின்ற சாக்கடை தமிழ்ச் சினிமாக்களும்- தொலைக்காட்சி சின்னத்திரை நாடகங்களும் ஆக்கிரமித்து நிற்கும் இக்கால கட்டத்தில், இவற்றின் ஆதிக்கத்தையெல்லாம் உடைத்தெறியும் வல்லமை கிராமிய நாடகங்களுக்கு உண்டு என்பதை இந்த "மரிசித்தாள்" நாடகம் நிரூபித்துள்ளது.

அ.நிஷாந்தன் வாஸ்

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP