மன்னார் குடும்ப பராமரிப்பாளர் ஒன்றியம் இன்று அங்குராப்பணம் _
>> Wednesday, 6 January 2010
மன்னார் மாவட்டத்தில் உள்ள உளநோயாளர்களின் நலனை கருத்திற்கொண்டும் மன்னார் மாவட்டத்தின் உளநல அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு குடும்பப் பராமரிப்பாளர் ஒன்றியம் இன்று மன்னார் மாவட்ட உளநலப்பிரிவில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டதாக தெரிவு செய்யப்பட்ட அதன் தலைவர் nஐ.நிர்மலா தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டிற்காண உலக உளநல தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்திற்கான கருப்பொருளாக 'உளநோயளருக்கான சிகிச்சை.புனர்வாழ்வில் குடும்பம் மற்றும் சமுகத்தின் பங்கு" என்பதன் அடிப்படையில் உளநலப் பிரிவானது பல்வேறு பட்ட செயட்பாடுகளை மெற்கொண்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாகவும் சுகாதார அமைச்சின் மனநல பிரிவின் பணிப்பின் பேரிலும் இவ் ஒன்றியம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சமுதாய மட்டத்தில் உளநோய். சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு தொடர்பான விழிப்புனர்வை அதிகரிப்பதற்கும் சமுகப் பிரச்சினைகளை குறைப்பதனையும் நோக்காகக் கொண்டு இவ்வொன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிண்றது.