கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னாரில் இலங்கை வங்கி அதிகாரிமீது வெட்டு

>> Friday, 18 December 2009

மன்னார் இலங்கை வங்கி உதவி முகாமையாளர் ஸ்ரீபாஸ்கரன் (57 வயது) என்பவர் கத்திவெட்டுக்கு உள்ளாகிப் படுகாயமடைந்த நிலையில், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 7 மணியளவில் அவர் வங்கியில் கடமை முடிந்து தமது விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இடையில் மறித்த இருவர் அவரைக் கத்தியால் வெட்டியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். பலத்த வெட்டுக்காயங்களுடன் அவர்களின் பிடியிலிருந்து தப்பியோடி தனது இருப்பிடத்தை அடைந்தார்.

அங்கிருந்தவர்களின் உதவியுடன் அவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், ஒருவரைத்தேடி வருகின்றனர். வங்கி அதிகாரி ஒருவர் மீது நடத்தப்பட்ட இத்தாக்ககுதலை வங்கி ஊழியர்களும் கண்டித்துள்ளனர்

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP