மன்னாரில் சுழற்காற்று வீசியதால் வீட்டுக்கூரைகள் சேதம் _
>> Friday, 18 December 2009
மன்னாரில் நேற்று அதிகாலை வீசிய திடீர் சுழற் காற்றினால் மாவட்டத்தில் பல பாகங்களில் வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதோடு மரங்கள் பல முறிந்துள்ளன.
சுழல்காற்று வீசியபோது பல இடங்களில் உள்ள தென்னை, ,வாழை மரங்கள் சரிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து கடும் மழை பெய்தது.
பலத்த காற்று, மழையினால் உப்புக்குளம், பெரியகாமம், எழுதூர் போன்ற பகுதிகளில் சில வீடுகளின் மீது தென்னை மரம் சரிந்து விழுந்ததில் வீட்டுக்கூரை முற்றாக சேதமடைந்தது.
மன்னார் உப்புக் குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இவ்வாறு தென்னை மரம் விழுந்ததில் உறங்கிக் கொண்டிருந்த 14 வயதான ஒரு சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ___