மன்னாரில் ஐந்து தமிழர்கள் கைது
>> Friday, 18 December 2009
மன்னார் பேசாலைப்பகுதியில் ஆசிரியர் ஒருவர் உட்பட 05 தமிழர்கள் வியாழக்கிழமை(11-11-2010) அதிகாலை 3.00 மணியளவில் அவர்களுடைய வீட்டில் வைத்து சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு அழைத்தச்செல்லப்பட்டதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை வானில் சாதாரண உடையில் வந்த அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செபஸ்ரியன் சீலன் குரூஸ், எஸ்.ஏ. மரியந்தா, எஸ்.ஜெனிபர் குரூஸ், எஸ். பெனோ பெல்ரானோ, எஸ். மசன்ற் குரூஸ் ஆகிய ஐவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவர்கள் வவுனியா அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைகளின் பின் இவர்கள் கொழும்பு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். _