கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

புனித அந்தோனியாரின் திருப்பாகம் மன்னார் மறைமாவட்டத்திற்கு வருகை!

>> Friday, 18 December 2009

புனித அந்தோனியாரின் திருப்பாகம் (இதயம்) இலங்கைக்கு எடுத்து வரப்பட்டு இலங்கையின்பல்வேறு மாவட்டங்களுக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்நிலையில் அது நேற்று மன்னாருக்கு எடுத்துவரப்பட்டிருக்கின்றது.

விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் தள்ளாடி இராணுவ படைத் தலைமையகத்திற்கு எடுத்து வரப்பட்ட புனித அந்தோனியாரின்திருப்பாகம் (இதயம்) அங்கிருந்து மோட்டார் வாகன தொடர் பேரணியுடன் எடுத்து வரப்பட்டு மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மக்கள் தரிசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது மன்னார்  மாவட்டத்தில் உள்ள விசுவாசிகளின் பக்தி முயற்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
புனித அந்தோனியாரின் இதயத்தை தரிசிப்பதற்காக மன்னார் மாவட்டத்தின் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகள் உள்ளடங்கலாக அனைத்து பகுதிகளில் இருந்தும் இன மத பேதமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுகின்றனர்.


பதுவை நகர் அந்தோனியார் திருத்தல பரிபாலகரும் இலங்கையின் கத்தோலிக்க மக்களுக்கான இத்தாலிய ஆன்மீக இயக்குநரும் மன்னாரிற்கு எடுத்துவரப்பட்டிருக்கும் புனித அந்தோனியாரின் திருப்பாகத்துடன் வருகை தந்திருப்பதாக மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவிக்கின்றார்.

பக்தர்களின் தரிசிப்பிற்காக வைக்கப்பட்டிருக்கும் புனித அந்தோனியாரின் திருப்பாகம் (இதயம்) நேற்று மாலை 3.00 மணி வரை புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைக்கப்பட்டு பின் அங்கிருந்து வவுனியா றம்பைக் குளத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு மக்கள் தரிசிப்பிற்காக எடுத்துச் செல்லப்பட்டது என மன்னார் ஆயர் இல்லம் மேலும் தெரிவிக்கின்றது.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP