கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னாரில் எண்ணெய்க்கிணறுகள் தோண்டும் இடங்கள் அடையாளம் காணப்படுகின்றன

>> Friday, 4 December 2009

மன்னார் கடற்பரப்பிலுள்ள எண்ணெய் வளத்தைக் கண்டு எண்ணெய்க்கிணறுகளை அமைக்கும் திட்டப்பணியை இந்திய நிறுவனம் கைர்ன் நடத்திவருவது தெரிந்ததே. அந்தப் பகுதியில் இப்போது வானிலைத் தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும், கடலலைகள் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத் தலைவர் நீல் டி சில்வா, அடுத்த ஆண்டும் ஒக்டோபருக்கு முன்னர் 3 பரீட்சார்த்த கிணறுகளை அந்நிறுவனம் தோண்டிவிடும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே இப்போது அந்த எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்படுவதற்கான இடங்களைக் கண்டறியும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தரவு சேகரிப்புப் பணிகள் இந்த காலாண்டில் நிறைவுசெய்யப்பட்டு, 2010 நடுப்பகுதியில் அத்தரவுகள் ஆராயப்படவுள்ளதாகவும், இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, துளையிடும்பணியானது 2011 அரையாண்டில் தொடங்கவுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.






Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP