இடைநிறுத்தப்பட்ட வடிகாலமைப்பு திட்டத்தினால் மன்னார் மக்கள் அசௌகரியம்
>> Friday, 4 December 2009
யுனோப்ஸ் நிறுவனத்தின் திட்டத்தின் கீழ் மன்னார் நகரசபை மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து மன்னார் நகரில் மேற்கொள்ளப்பட்டு வந்த வடிகால் அமைப்பு வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பெரும் அசௌகரியங்களை முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யுனோப்ஸ் அமைப்பினால் வழங்கப்பட்ட 63 கோடி டுபாய் நிதியின் கீழ் மேற்படி மன்னாரில் வடிகாலமைப்பு வேலைத்திட்டங்கள் மன்னார் பகுதியில் இடம்பெற்று வந்தது. இவ்வெலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் கழிவு நீர் தேங்கி வழிந்தோட முடியாதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதாகவும் நுளம்பு பெருகி வருவதாகவும் பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே மேற்படி வடிகால்களை துப்பரவு செய்யுமாறும் இடைநிறுத்தப்பட்டவேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து மக்களின் அசௌகரியங்களை தீர்க்குமாறு மக்கள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.மன்னாரில் அண்மைகாலமாக டெங்கு நோயினால் 50 க்கும் மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டட்டுருந்தனர்.இதற்கு காரணம் வடிகால் அமைப்பு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.