கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

2010 பொதுத்தேர்தல் களம் ஆரம்பம்/ 196 ஆசனங்களுக்காக 7358 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்/--வன்னியில்

>> Tuesday, 1 December 2009

ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் 196 ஆசனங்களுக்காக ஏழாயிரத்து முன்னூற்றி ஐம்பத்து எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
22 மாவட்ட தேர்தல் தொகுதிகளில் 24 அரசியல் கட்சிகளும், 310 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

பல மாவட்டங்களில் முன்னணி அரசியல் கட்சிகள் சில தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 பேர் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 22 அரசியல் கட்சிகள் மற்றும் 16 சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தகுதி பெற்றுள்ளன. எனினும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக கிழக்கு மாகாண, திகாமடுல்ல மாவட்டத்தில் 680 பேர் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையாக 197 அணிகள் போட்டியில் குதித்துள்ளன. அவற்றில் 115 சுயேச்சைக் குழுக்களாகும்.

தமிழ்ப் பகுதிகளில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவது இதற்கு முன்னர் நடைபெற்ற ஆறு பொதுத் தேர்தல் களங்களை விடவும் முற்றிலும் மாறுபட்ட பின்னணி ஒன்றைத் தோற்றுவித்துள்ளதாக நோக்கர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறவிருந்ததால் யாழ். செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக கட்சி உறுப்பினர்களும், சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வருகை தந்து கொண்டிருந்தனர். இதனால் யாழ்.செயலகத்தின் முன் வாயில் வேட்பாளர்களால் நிறைந்து வழிந்ததைக் காணமுடிந்தது.

நேற்று நண்பகல் 12மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்றதும் 12.30 மணி முதல் 1.30மணி வரை வேட்பு மனுத் தாக்கல் தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஆட்சேபனைகள் நிறைவு பெற்றதும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், அரச அதிபருமான கே.கணேஷ், யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உத்தியோக பூர்வமாக தகவல்களை வெளியிட்டனர்.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 16 கட்சிகளும், 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்தன. அவற்றில் 4 சுயேச்சைக் குழுக்களினதும் ஒரு கட்சியினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விண்ணப்பங்களில் பூரணமான தகவல் வழங்கப்படாமையால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.



அதேவேளை இலங்கையின் நாடாளுமன்றத்தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முதல் தடவையாக அதிக எண்ணிக்கையாக 197 அணிகள் போட்டியில் குதித்துள்ளன. அவற்றில் 115 சுயேச்சைக் குழுக்களாகும். மொத்தமாக 1867 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் 31 பேரே இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கொழும்பில், 22 அரசியல் கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் சேர்ந்த ஆகக் கூடுதலான 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், திகாமடுல்ல மாவட்டத்தில் இரண்டாவது கூடிய எண்ணிக்கையான 660 பேர் போட்டியிடுகின்றனர்.

வடக்கு கிழக்கு ஐந்து தோ்தல் மாவட்டங்களிலும் களம் இறங்கவுள்ள கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், வேட்பாளர்களின் நிலைவரம்:

யாழ்ப்பாணம் - 15 அரசியல் கட்சிகள் - 12 சுயேட்சைக்குழுக்கள் - 324 வேட்பாளர்கள்

வன்னி - 18 அரசியல் கட்சிகள் - 9 சுயேட்சைக்குழுக்கள் - 306 வேட்பாளர்கள்

மட்டக்களப்பு - 17 அரசியல் கட்சிகள் - 27 சுயேட்சைக்குழுக்கள் - 360 வேட்பாளர்கள்

திருகோணமலை - 17 அரசியல் கட்சிகள் - 14 சுயேட்சைக்குழுக்கள் - 217 வேட்பாளர்கள்

திகாமடுல்லை - 17 அரசியல் கட்சிகள் - 49 சுயேட்சைக்குழுக்கள் - 660 வேட்பாளர்கள்

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP