கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தில் மேலும் 17குடும்பங்களை சேர்ந்த 54பேர் இன்று மீள் குடியேற்றம்!

>> Friday, 4 December 2009

மன்னார் தீவுப்பகுதிக்குள் இருந்து மேலும் 17 குடும்பங்களை சேர்ந்த 54பேர் இன்று திங்கள்கிழமை காலை 10:30 மணியளவில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மன்னாரில் இருந்து 46 குடும்பங்களை சேர்ந்த 131பேர் கடந்தவாரம் அவர்களுடைய சொந்த கிரமமான பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தின் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மன்னாரில் இருந்து அழைத்து செல்லப்பட்ட மக்களுக்கான உணவுவசதிகளை மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல் மேற்கொண்டுள்ளார். மன்னார் தீவுப்பகுதிக்குள் இருந்து இதுவரை 63 குடும்பங்களை சேர்ந்த 185பேர் மீள்குடியேற்றத்திற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சகல பாகங்களிலிருந்தும் இதுவரை பெரியபண்டிவிரிச்சான் கிராமத்துக்கு 256 குடும்பங்களை சேர்ந்த 923பேர் மீள்குடியேற்றத்திற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளது குறிப்பி;டத்தக்கது.
இதே வேளைமாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுரிகுளம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள், தாம் தொடர்ந்தும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.


சவுரிகுளம் கிராமத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் தற்போது மலசலகூட வசதி இல்லாமையினால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.


எனவே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள மலசலகூடங்களை திருத்தி அமைத்து தருமாறு அம்மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP