கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னாரில் பிரமான்டமான இரண்டு கடற்பண்டிகள் மீட்பு-மீனவர் விளக்கமறியல்.(காணொளி படங்களும் இணைப்பு)

>> Wednesday, 4 November 2009

16-12-2010-மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியின் வங்காலைப்பாடு கடற்பகுதியில் கடற்தொழிலுக்குச்சென்ற மீனவர் ஒருவரின் வலைத்தொகுதியில் மிகவும் பிரமான்டமான இரண்டு கடற்பண்டிகள் சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில்,அவற்றை கரைக்கு கொண்டுவந்த மீனவர் ஒருவரை அப்பகுதியில் உள்ள கடற்படையினர் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் குறித்த மீனவரை மன்னார் பொலிஸார் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த மீனவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமரியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

நேற்று(15-12) மதியம் 2௩0 மணியளவில் தொழிலுக்குச்சென்ற மீனவர் ஒருவர் தான் ஏற்கனவே கடலில் போட்டிருந்த வலையினை பரிசோதித்த போது 2 பிரமான்டமான கடற்பன்டிகள் மாட்டி இறந்து கிடப்பதைக்காண்டுள்ளார்.பின் அவற்றை கடற்கரைக்கு கொண்டுவந்துள்ளார்.





இதன்போதே கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்க தகவல் வழங்க பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவரை கைது செய்துள்ளதோடு குறித்த 2 கடற்பண்டிகளையும் மீட்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.கடற்பண்டிகள் இரண்டு சோடியாக அகப்பட்டு உள்ளமையை கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த கடற்பண்டிகளைப் பார்வையிட்டுள்ளனர்.

மேற்படி இரண்டு கடற்பண்டிகளும் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக கொழும்பிற்கு ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நிருபர் (SRL)

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP