கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னார் பாடசாலைகளில் தரம் 01 இல் மாணவர்களை சேர்க்க அதிகளவு பணம் அறவீடு

>> Wednesday, 4 November 2009

[14-10-2010] மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக 05 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை என்ற

ஏதிர்வரும் 2011 ஆம் ஆண்டு தரம் 01 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக மன்னார் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு பெற்றோர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கச் செல்லுகின்றனர்.

ஆனால் பாடசாலை நிர்வாகம் மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதாக இருந்தால் 05 ஆயிரம் ரூபாய் முதல் 20ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை என்ற பெயரில் பணம் அறவிடுவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.அரச பதவி வகிப்பவர்களின் பிள்ளைகளுக்கு குறைந்த அளவில் பணமும் ஏனையோரின் பிள்ளைகளுக்கு கூடியடுயவு பணமும் அறவிடப்படுகின்றது.சில பாடசாலைகளில் பழைய மாணவர்களை வைத்தும் ஏணைய பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்களினுடாக பணம் அறவிடப்படுவதாக பணம் செலுத்திய பெற்றோர் தெரிவிக்கின்றனர்.பணம் செலுத்துபவர்களுக்கு எவ்விதமான பற்றுச்சீட்டுக்களும் வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வெரு வருடமும் இது போன்ற சம்பவம் இடம் பெற்று வருவதாகவும் மன்னார் வலயக்கல்வித்தினைக்கடுயம் இவ்விடையத்தில் மௌனம் காட்டி வருவதாகவும் பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.இவ்விடையம் தொடர்பாக மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளர் எம்.ஆபேல் றெவ்வல் ஐ தொடர்பு கொண்டு கேட்ட போது.

மேற்படி பணம் அறவிடப்படுவது சட்டத்திற்கு முறனானது என்றும் பணம் அறவிடப்படும் அதிபர்இஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேற்படி பணம் அறவிடப்படுவது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP