மன்னார் நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதி நியமனம்
>> Friday, 27 November 2009
மன்னார் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தமது முதல் அமர்வினை நடத்தியதாகவும் மன்னார் நீதிமன்றச் செயலாளர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட நீதிமன்றமும், நீதவான் நீதிமன்றமும் ஒரே நீதவான் கீழ் இயங்கி வந்தன. இந்நிலையில் தற்போது நீதவான் நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதியாக ஜனாப்.ஜ.பயாஸ் றஸாக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மன்னார் நீதிமன்றம் இனிமேல் இரு அமர்வுகளாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலை அமர்வுகள் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையிலும் மாலை அமர்வுகள் நீதவான் நீதிபதி பயாஸ் றஸாக் முன்னிலையிலும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ___