மன்னார் உயிலங்குளத்தில் மூன்று எலும்புக்கூடுகள் மீட்பு!
>> Tuesday, 15 September 2009
மன்னார் உயிலங்குள பிரதேசத்தில் மூன்று எலும்புக்கூடுகளை சிறீலங்காக் காவல்துறையினர் மீட்டுள்ளனர் என காவல்துறைப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக்க கூறியுள்ளார்.
மன்னார் மதவாச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உயிலங்குளத்தில் சாலைப் புனரமைப்பில் ஈடுபட்ட தொழிலாளிகள் அருகில் இருந்த சதுப்பு நிலம் ஒன்றைத் துப்பரவு செய்த போதே நிலத்தில் புதைக்கபட்ட நிலையில் மூன்று எலும்புக் கூடுகளைக் கண்டுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மூன்று எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
எலும்புக் கூடுகளுக்கு அருகில் ஏ.கே தானியங்கித் துப்பாக்கி 1, ரவைக்கூடுகள் 3, அதற்கான 40 ரவைகள், கா.வி.பு 00294 எனும் தகட்டு இலக்கம், மின்சூழ்கள் 2, சீருடைகள் 2 என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் இவை விடுதலைப் புலிகளுடைய உறுப்பினர்களாக இருக்காலம் என காவல்துறைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.