நானாட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் இடம்பெயர்ந்தோருக்கான தற்காலிக கூடாரங்கள்
>> Sunday, 20 September 2009
10/14/2009
நானாட்டான் பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜீவநகர் பகுதியில் தற்காலிக கூடாரங்களை அமைக்கும் பணியினை மன்னார் ஒபர்(சிலோன்) அமைப்பு மேற்கொண்டுவருகிறது.வவுனியா, மற்றும் செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் இப்பகுதிக்கு இன்னும் சில தினங்களில் அழைத்துவரப்படவுள்ளனர்.இதனால் துரித கதியில் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுவருவதாகவும், தற்போது 100 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் மேலும் 100 வீடுகள் அமைக்க இருப்பதாகவும் மன்னார் ஒபர் (சிலோன்) அமைப்பின் உதவி இணைப்பாளர் எம்.சிவப்பிரகாசம்தெரிவித்தார்.
-வீரகேசரி இணையம்