மன்னார் பள்ளிவாசல்களில் வலுவிழந்தோருக்கு வசதிகள் இல்லை
>> Sunday, 20 September 2009
மன்னாரில் பெரிய ஜும்மா பள்ளிவாசல்கள் இருந்த போதிலும் இவற்றில் வலு இழந்தவர்களூக்கான அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என வலுவிழந்த முஸ்லீம் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர் .மன்னாரில் எருக்கலம் பிட்டி, தாராபுரம், புதுக்குடியிருப்பு ,தலைமன்னார் , மூர்த்திவீதி , உப்புகுளம் , பெரியகடை, ஆகிய பிரதான இடம்களில் பலகோடி ரூபா செலவில் இப்பள்ளிவாசல்கள் நிர்மானிக்கப் பட்டுள்ளன ஆனால் இவற்றில் ஒன்றிலாவது வலுவிழந்தோர்கான நடை பாதைகள் கழிவரைகள் எதுவும் அமைக்க்ப்படவில்லை இதனால் வலுவிழந்தவர் தமது சமய கடமைகளை நிறைவேற்றுவதட்காக இப் பள்ளிவாசல்களுக்கு செல்ல தயன்குகிறார்கள் மன்னார் மாவட்டத்தில் சுமார் 500 வலுவிழந்த மக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.