கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

பஸ் டிக்கெற்றில் காதல் வசனம் நடத்துநர்கள் அட்டகாசம்

>> Sunday, 20 September 2009

மன்னாரிலிருந்து வெளியிடங்களுக்குச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சிலவற்றின் நடத்துநர்கள், பயணிகளுடன் தகாத முறையில் நடந்து கொள்வதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது
குறிப்பாக மன்னாரிலிருந்து வவுனியா செல்லும் தனியார் பஸ்கள் சிலவற்றின் நடத் துநர்கள் இளம் பெண்களிடம் பயணச் சீட்டின் பின்புறத்தில்
காதல் வார்த்தைகள் மற்றும் தமது தொலைபேசி இலக்கங்களை எழுதிக் கொடுத்துத் தொலைபேசி அழைப்பை ஏற் படுத்துமாறு கூறுகின்றார்கள் என முறையிடப்பட்டுள்ளது.


சில இளம் பெண்களிடம் பயணச் சீட்டினைக் கொடுத்து விட்டு மீதிப் பணத்தினை அப் பெண்களிடம் கதைத்துத் தொலைபேசி இலக்கத்தைப் பெற்ற பின்னரே வழங்குவதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக சங்கத்தின் அடுத்த கூட்டத்தில் ஆராயப்பட்டு நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP