மன்னார் மாவட்டத்தில் நேற்று 229 பேர் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்
>> Sunday, 20 September 2009
மன்னார் இலுப்பைக்குளம் தடுப்பு முகாமில் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வன்னிமக்களின் ஒரு தொகுதியினர் நேற்று அவர்களுடைய சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என அரச செய்தி தெரிவித்துள்ளது.
இலுப்பைக்குளம் தடுப்பு முகாமில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 518 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர் எனவும் அவர்களில் 82 குடும்பங்களை சேர்ந்த 229 பேர் மீள குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
இவர்களில் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களை சேர்ந்த 91 பேரும், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 38 குடும்பங்களை சேர்ந்த 106 பேரும் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 93 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் இலுப்பைக்குளம் தடுப்பு முகாமில் உள்ளனர்