கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னாரில் மீன்களின் விலை அதிகரிப்பு-மக்கள் விசனம்

>> Saturday, 30 January 2010

மன்னாரில் கடல் மீன்களின் விலை கடந்த பல தினங்களாக உயர்ந்த விலைக்கு விற்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் பல கடற்கரைப்பகுதிகளிலும் மீன் பிடிக்கப்பட்டு வருகின்றது.நாளாந்தம் பல ஆயிரக்கணக்காண கிலோ மீன்கள் பிடிக்கப்படுகின்றது.தென்பகுதிக்கும் உடனுக்கடன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

எனினும் மன்னாரில் மீனின் விலை அதிகரித்துக்காணப்படுவதோடு தரமற்ற மீன்களும் சந்தையில் விற்பனைசெய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மன்னார் மீனவர்களிடம் கேட்ட போது,

தற்போது அதிகளவான மீன் வகைகள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதினால் மன்னாரில் மீன் வகைகளின் விலை சற்று அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நிருபர்

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP