மன்னார் பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை!
>> Friday, 4 December 2009
மன்னார் கீரி பகுதியிலிருந்து கிணறு மூலம் பெறப்பட்டு, பௌசர் மூலம் வழங்கப்படும் நீர் தமக்கு உரிய முறையில் விநியோகிக்கப்படாததால், பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (19 ஜூலை 2010)காலை 9.00 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல், உடனும் மன்னாரிலுள்ள 14 பௌசர் உரிமையாளர்களை அழைத்து இதுவிடயம் தொடர்பாகக் கலந்துரையாடினர்.பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக பௌசர் உரிமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டு, கிராமங்களுக்கு நீர் விநியோகம் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
மன்னாரிலுள்ள பௌசர் உரிமையாளர்கள் மன்னார் கீரியில் உள்ள நன்னீர் பொதுக் கிணறு ஒன்றில் அளவுக்கு அதிகமாக நீரைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற புகாரையடுத்து, நாள் ஒன்றுக்கு ஒரு பௌசர் உரிமையாளர்கள் நாள் ஒன்றுக்கு 3 தடவை மட்டுமே நீரை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
)