மன்னாரில் படுகொலைச் சந்தேக நபர்கள் மூவருக்கு விளக்கமறியல்!
>> Friday, 18 December 2009
ஆண் ஒருவரைப் படுகொலை செய்து , சடலத்தை எரித்திருந்தனர் என்கிற சந்தேகத்தின் பேரில் மூன்று சந்தேகநபர்களை மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிவான் கே.ஜீவராணியின் உத்தரவின் பேரில் இம்மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
மன்னார் மூர் வீதியில் காட்டுப் பள்ளி பகுதிக்கு பின்புறமாகவுள்ள கடற்கரைக்கு சற்றுத் எரிக்கப்பட்ட நிலையில் கடந்த 27 ஆம் திகதி இச்சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஆயினும் சடலம் யாருடையது ? என்பது இன்னமும் அடையாளம் காணப்படவே இல்லை.
இது ஒரு படுகொலைச் சம்பவம் என்று பொலிஸார் நம்புகின்றனர். புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்ட மன்னார் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கடந்த திங்கட்கிழமை 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை கைது செய்தனர்.அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் இருவரையும் பிடித்தனர்.
முதலில் பிடிக்கப்பட்ட நபர் நேற்றும், ஏனைய இருவரும் இன்றும் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டனர். நீதிமன்றம் மூவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கின்றமைக்கான உத்தரவைப் பிறப்பித்தது.