மன்னாரில் 16 வயது மாணவரைக் காணவில்லை என முறைப்பாடு
>> Wednesday, 16 December 2009
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் தரம் 09 இல் கல்வி கற்கும் செபமாலை போல்ட் செல்டன் வூஸ் (வயது 16) எனும் மாணவரைக் கடந்த (02.01.10) மாலை 6.00 மணி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் இன்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த மாணவர் மன்னார் நூறு வீட்டுத்திட்டம் பெரிய கமம் பகுதியில் வசித்து வந்ததாகவும் காணமல் போவதற்குச் சற்று முன்னர் கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த அவரது நண்பர்களது வீட்டுக்கு முன்னால் கதைத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரே மாணவர் காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். குறித்த மாணவருடன் கதைத்துக் கொண்டிருந்தவர்கள் இதுவரை அவர்கள் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்குச் செல்லவில்லை எனவும் தெரிய வருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள் .