கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மாணவர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் தேவையற்ற புகைப்படங்களும் காணொளிகளும் உள்ளன மன்னார் வலையக்கல்விப்பனிப்பாளர்

>> Wednesday, 4 November 2009

{6-12-2010]மன்னாரில் கல்விகற்கும் உயர்தர மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கையடக்கத்தொலைபேசிகளில் தேவையற்ற புகைப்படம்,மற்றும் வீடியோக்காட்சிகள் ஆகியவற்றை பதிவு செய்து பார்வையிடுவதாகவும் இதனால் இச்செயல்பாட்டில் ஈடுபடும் மாணவர்களின் வாழ்க்கை சீரலியக்கூடம் என மன்னார் வலையக்கல்விப்பனிப்பாளர் எம்.ஏ.ஆபேல் றெவ்வல் கவலை தெரிவித்தார்.

இவ்வருடம் இடம் பெற்ற தரம்௫ புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மன்னார் மாவட்ட மாணவர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு மன்னார் வலையக் கல்விப்பனிமனையின் அரம்பக்கல்விப் பிரிவின் ஏற்பாட்டுல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9௩0மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியபாடசாலையில் நடைபெற்றது.

இதன் போது சிறப்பு அதிதியாக மன்னார் வலையக்கல்விப்பனிப்பாளர் எம்.ஏ.ஆபேல் றெவ்வல், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் உரையாற்றகையில்,

மாணவர்கள் மேற்படி தேவையற்ற புகைப்படம்,வீடியோக்காட்சிகளை தொலைபேசியில் பதிவு செய்து பார்வையிடுவது கண்டுபிடிக்கப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள போதும் மாணவர்கள் மீது பெற்றோர் அக்கரையாக இருக்க வேண்டும்.இவ்விடையம் தொடரும் பட்சத்தில் மாணவர்களின் எதிர்காலம் சீரலிந்து விடும் என தெரிவித்தார்.

மன்னர் நிருபர்[SLR]

Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP