காணாமல் போனவர்களை நினைவு கூர்ந்து மன்னாரில் சர்வமதப்பிரார்த்தனை (படங்கள் இணைப்பு)
>> Wednesday, 4 November 2009
மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மன்னாரில் இன்று காலை 10 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலைய வளாகத்தில் மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களின் எற்பாட்டில் காணாமல் போனவர்கள்,இறந்த உறவுகளை நினைவு கூர்ந்து சர்வமத பிராத்னை இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மரைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை,மன்னார் சர்வமதத்தலைவர்கள், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எகலியாகெடவின் மனைவி திருமதி சந்தியா எகலியகொட
ஆகியோர் கலந்துகொண்டனர்
இதன்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை சுமந்தவாறு உருக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
மன்னார் நிருபர்(SRL)