மன்னாரில் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்(பட இணைப்பு) _
>> Wednesday, 4 November 2009
மன்னார் மாவட்டத்தில் 85,322 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் வாக்களிப்பதற்கான 68 வாக்களிப்பு நிலையங்கள் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மன்னார் தீவுப்பகுதிகளில் 28 வாக்களிப்பு நிலையங்களும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 40 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இடம்பெயர்ந்த வாக்காளர்களின் நலன் கருதி, மன்னாரில் மன்/அல்-அஸ்ஹார் பாடசாலையிலும், நானாட்டான் பாடசாலையிலும் விசேட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.